ACTIVITIES AND ADSMEDIA STATEMENTPBTSELANGOR

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு அரசு RM33.4 லட்சம்

ஷா ஆலம், ஏப்ரல் 8: சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிக்க மொத்தம் RM33.4 லட்சம் ஒதுக்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர், இந்தத் திட்டத்தின் வழி மொத்தமாக 33,400 (பி40) குறைந்த வருமானம் கொண்ட குடும்பத் தலைவர்கள் பண்டிகையைக் கொண்டாட உதவியதாகக் கூறினார்.

56 மாநிலச் சட்டமன்றங்களில் (DUN) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தலா RM100 மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் ஏப்ரல் 1 முதல் இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும் என வீ.கணபதிராவ் விளக்கினார்.

“ஈ பண்டிகைக்குத் தயாராகும் வகையில் இந்த உதவி ஏழைக் குடும்பங்களின் சுமையைக் குறைக்க உதவும் ஒரு மார்க்கமாக இது கருதப்படுகிறது.

“தகுதியுள்ள பெறுநர்கள் அந்தந்தச் சட்டமன்றச் சேவை மையங்களால் அறிவிக்கப்படுவார்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம்,” என்று அவர் கூறினார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக B40 குழுவை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப் படுத்தப் பட்டது.  சிலாங்கூரில் உள்ள எல்லா முக்கிய சமுகங்களும் அவரவர் சமய பண்டிகைகளுக்கு ஏற்ப அவர்கள் பெருநாட்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :