Datuk Bandar Majlis Bandaraya Petaling Jaya, Mohamad Azhan Md Amir (tengah) ketika melawat bazar Ramadan SS6/1, Petaling Jaya pada 5 April 2022. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

ரமலான் பஜார்களுக்குச் சொந்தமாக உணவு பாத்திரங்களைக் கொண்டு வருவது பிளாஸ்டிக் இல்லாத சமுதாயத்திற்கான ஆரம்பப் படியாகும்

சுபாங் ஜெயா, ஏப்ரல் 9 – சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிஎஸ்ஜே) ரமலான் பஜாருக்கு வருபவர்கள் சொந்த உணவு எடுத்துச் செல்லும் பாத்திரங்களைப் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்து, மாநில நிர்வாகம் ஸ்மார்ட் தொழில் நுட்பத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதற்குச் சான்றாகும்.

பிளாஸ்டிக் அற்ற பிரச்சாரத்தின் மூலக் கட்டமாகும், பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அகற்றுவதற்கான தொடக்கமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பிளாஸ்டிக் பைகளை அகற்றுவது (பயன்பாடு) சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பிளாஸ்டிக் பைகளை வழங்காத பஜார்களில் தொடங்கிச் சுத்தமான நீர் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.

இதனை “செயல்படுத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்படும், ஆனால் இது தொடர்ந்தால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும், வடிகால் மற்றும் ஆறுகளில் அதை அகற்றவும் உதவும்,” என்று அவர் கூறினார்.

நேற்று மாலைப் பூச்சோங்கில் உள்ள பண்டார் கின்ராரா 5 ரமலான் பஜாரில் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) 3.0-ஐ ஆரம்பித்து வைத்த பிறகு அமிருடின் இதனைத் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், ஊராட்சி மன்றங்களின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் ஆகியோருடன் மந்திரி புசார் வணிகர்கள் மற்றும் பஜார் வருபவர்களுடன் உரையாடலின் போது இதனைத் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் இல்லாத பிரச்சாரத்தின் மூலம், எம்பிஎஸ்ஜே ஒவ்வொரு புதன்கிழமையும் தங்கள் சொந்த உணவு பாத்திரங்களைக் கொண்டு வரும் பார்வையாளர்களுக்கு RM5 மதிப்புள்ள 2,000 பற்றுச் சீட்டுகளை வழங்குகிறது.


Pengarang :