ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

ரேபிஸ்: தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

ஷா ஆலம், ஏப்ரல் 13: ரேபிஸ் அபாயத்தைத் தவிர்க்க தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஊராட்சிமன்றங்களுடன் ஒத்துழைக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சில தனிநபர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் ஊராட்சிமன்ற அதிகாரிகளுக்கு விலங்குகளைப் பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

“அனைத்து ஊராட்சிமன்ற அதிகாரிகளுக்கும் நாய்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் தெரு நாய்கள் அல்லது பிறவற்றைச் சுட ஊராட்சிமன்றங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

“எனவே, இந்த தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது மக்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.

டிங்கி காய்ச்சலைப் போன்று இந்நோய் பரவாது என்பதால், அதைக் கையாள்வதற்கு மாநில அரசால் சிறப்பு ஏற்பாடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, நோய் பரவுவதைத் தடுக்கும் பொறுப்பு கால்நடை மருத்துவ சேவைகள் துறை (DVS), சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆகும்.


Pengarang :