ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மே 12 ஆம் தேதி அன்வார்-நஜிப் விவாதம்- மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 17- எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும்  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் இடையிலான பொது விவாதம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி நடைபெறும்.

இந்த விவாதம் மலாயா பல்கலைக்கழக வேந்தர் துங்கு மண்டபத்தில் இரவு 9.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெஅடிலான் கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சிலும் தேசிய முன்னணி தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜாலிலும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். இதில் முதலாவது பிரிவு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சப்புரா எனர்ஜியின் நிலை மற்றும் அதனை காப்பாற்றுவதா? இல்லையா? என்பது பற்றியதாகும்.

பொருளாதாரம், அரசியல் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் முறையை உட்படுத்திய மலேசியாவின் எதிர்காலம் தொடர்பான விவாதத்தை  இரண்டாவது பிரிவு உள்ளடக்கியிருக்கும். மூன்றாவது பிரிவில் கேள்வி பதில் அங்கம் இடம் பெறும். என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :