ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோலாலம்பூரின் 15 பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், மே 2- குழாய் உடைப்பு காரணமாக கோலாலம்பூரின் 15 இடங்களில் நேற்று ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று அதிகாலை 6.00 மணியளவில் சீரடைந்தது.

நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பும் வழங்கிய பயனீட்டாளர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

தாமான் பெர்த்தாமா, புடு உலு பாருவில் உள்ள பம்ப் ஹவுஸ் நீர் அழுத்த மையத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணி காரணமாக கோலாலம்பூரின்  15 இடங்களில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று அதிகாலை 6.00 மணியளவில் முழுமையாக சீரடைந்தது என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் நேற்று மாலை தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக நீர் விநியோகம் கிடைக்கும் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

 


Pengarang :