ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

ஊராட்சி மன்றங்கள் விதிகளின் அமலாக்கத்தை நிலைநிறுத்த – குணராஜ் அறிவுறுத்து

ஷா ஆலம், மே 7: ஊராட்சி மன்றங்கள் விதிகளின் அமலாக்கத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறுகையில், இந்த நடவடிக்கை சமூகத்தை தொடர்ந்து கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவதில் இருந்து நெறிப்படுத்தவும், இதனால் தூய்மையான மாநிலத்தை உருவாக்கவும் முடியும் என்று நம்புவதாக கூறினார்.

“உதாரணமாக, மூவாருக்கு ஆசியாவிலேயே தூய்மையான மாவட்டம் என்ற விருது வழங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் குடியிருப்பாளர்களின் அணுகுமுறையை பாராட்டியே ஆக வேண்டும்.

எனவே, கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் பொதுமக்கள் மீது அதிக அபராதம் வசூலிப்பதன் மூலம், பொறுப்பற்ற நபர்களை இச்செயல் பயமுறுத்தும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிள்ளானையும் மூவார், லங்காவி மற்றும் ஜார்ஜ் டவுனையும் விட  மிகவும் தூய்மையானதாக முடியும், அதே வேளையில், செந்தோசா சட்டமன்றம் சிலாங்கூரில் சிறந்த ஒன்றாக்குவோம்.

ஆசியாவிலேயே தூய்மையானதாக போற்றப்படும் மாநிலமாக சிலாங்கூரை மாற்ற எங்களுடன் வாருங்கள்” என்று அவர் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்.


Pengarang :