ECONOMYSUKANKINI

ஹனோய் சீ விளையாட்டு- நீச்சல் வீராங்கனை நூர் டபித்தா முதல் தங்கம் வென்றார்

 ஷா ஆலம், மே 8- வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெறும் 31வது சீ விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் 1 மீட்டர் ஸ்பிரிங் போர்டு நீச்சல்  போட்டியில்  நூர் தாபிதா சப்ரி  மலேசியாவுக்கு  தனது முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

இதே போட்டியில் சக நாட்டவரான கிம்பர்லி பாங் கியான் பிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். நூர் தாபிதா சப்ரி சிறப்பான முறையில் நீரில் குதித்து 290.45 புள்ளிகளைப் பெற்றார்.  கிம்பர்லி பாங் 230.00 புள்ளிகளைப் பெற்ற வேளையில்  வியட்னாம் விளையாட்டாளரான ஙோ புவோங் மாய் 240 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.


Pengarang :