ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூர் ஆண்டுதோறும் 500,000 மீன்களை ஆறுகளில் விடுவதன் வழி அவை அழிந்துவிடாமல் தடுக்கிறது

ஷா ஆலம், மே 14: நன்னீர் மீன்வளம் அழிந்து வருவதைத் தடுக்கும் முயற்சியில் ஆண்டுதோறும் 500,000 மீன்கள் ஆறுகளில் விடப்படுகின்றன.

நவீனமயமாக்கல் மற்றும் விவசாய அடிப்படைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், 2008 ஆம் ஆண்டு பக்காத்தான் ராயாட் மாநில அரசாக மாறியதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“சிலாங்கூர் மாநில மீன்வளத் துறையுடன் ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் கட்டம் கட்டமாக மீன் குஞ்சுகள் ஆறு, குளம் .குட்டைகளில் விடப்படுவதாகவும், அவை லாம்பம், கேலா மற்றும் பல வகையான உள்ளூர் மீன்கள் இனங்கள், ”என்று சிலாங்கூர்கினியிடம் இஸாம் ஹாஷிம் கூறினார்.

நீர் மாசுபாடு, நிலத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு மீன் இனங்களை விடுவிக்கும் நபர்களின் அணுகுமுறை போன்ற பல காரணிகளால் மீன்வளம் அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.

“இந்த அன்னிய மீன்களின் உயிரியலால் தண்மை , உள்ளூர் மீன் வகைகளின் பெரும்பாலானவற்றை அழித்தோ, ஆக்கிரமித்தோ சுற்றுச்சூழல் அமைப்பை  மாற்றக்கூடியவை, இது உள்ளூர் பூர்வீக இனங்களில் அழிவை ஏற்படுத்துகின்றன.

“நாட்டு மீன் இனங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வெளிநாட்டு மீன் அச்சுறுத்தல்களின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :