ECONOMYTOURISM

சுற்றுலாத் துறையில் 15,000 முதல் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறை

கூச்சிங், மே 14: நாட்டின் சுற்றுலாத் துறை தற்போது சுமார் 15,000 முதல் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, உள்ளூர் சுற்றுலா சங்கங்களின் தரவுகளிலிருந்து மதிப்பீடு பெறப்பட்டது, மேலும் இப் பிரச்சினையானது இந்த துறையில் மட்டுமல்லாது, நாட்டில் உள்ள மற்ற அனைத்து தொழில்களிலும் உண்டு.

வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை வர வைப்பது உட்பட, இது தொடர்பான பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் இப்போது செயல்பட்டு வருவதாக நான்சி கூறினார்.

“அதிகாரப்பூர்வமாக, எனது அமைச்சகம் பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்று முதல் இரண்டு மாதங்களில் பிரச்சினை தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதைத் தவிர, உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துமாறு முதலாளிகளுக்கு அறிவுறுத்தப் படுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, இதுவரை நாட்டிற்குள் பிரவேசித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 க்கும் அதிகமான மக்களை எட்டி உள்ளதாகவும், இவ்வருட இறுதி வரை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :