ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிகிஞ்சானில் வெள்ளம் நிலைமை சீரடைந்தது- துப்புரவுப் பணிகள் தீவிரம்

ஷா ஆலம், மே 26- சிகிஞ்சான் பகுதியில் நேற்று பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம்  வடிந்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

எனினும், சிகிஞ்சான் பொது மார்க்கெட் பகுதியில் வெள்ள நீர் இன்னும் தேங்கியிருப்பதாக கூறிய அவர், இன்று மாலைக்குள் அங்கு நீர் முற்றாக வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம், தொகுதி சேவை மையம், மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்களைத் தாம் பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட பேரிடர் நிதியிலிருந்து உதவிகள் வாங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை வழங்கும்படி அவர்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக இங் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் உதவியைத் தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர சொன்னார்.

நேற்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பெய்த அடை மழையில் கிசிஞ்சான் வட்டாரத்தின் பல இடங்களில் அரை மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது.  இந்த வெள்ளப் பேரிடரில் ஆயிரக்கணக்கான வீடுகளோடு போலீஸ் நிலையம், பொது மண்டபமும் நீரில் மூழ்கின.


Pengarang :