ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் மாவட்ட  பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிக்கு சிலாங்கூர் மாநில அரசின் மானியமாக  வெள்ளி 17 லட்சத்து 11 ஆயிரம் உதவி

ஷா ஆலம் ஜூன் 27- கோல லங்காட் மாவட்டத்திலுள்ள பல மொழி ஆரம்பப் பள்ளிகளின்  கல்வி மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசின் மானியமாக  வெள்ளி 17 லட்சத்து 11 ஆயிரத்தை 2022 ம் ஆண்டுக்கான உதவியாகப் பெற்றன.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்களிடமிருந்து அதற்கான நிதி பெறும் சடங்கில் அம் மாவட்டத்தில் உள்ள 13 தமிழ்ப்பள்ளிகள்  பிரதிநிதிக்கும் வண்ணம் தெலுக் பங்கிலீமா காராங் ஆரம்பத் தமிழ்ப்பள்ளி வெள்ளி 75,000த்தையும், கேரித்தீவு மேற்கு பகுதி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி வெள்ளி 65 ஆயிரத்தையும், பந்திங் சிம்பாங் மோரிப்  ஆரம்பத் தமிழ்ப்பள்ளி 60 ஆயிரத்தையும், கேரித்தீவு கிழக்கு தோட்ட ஆரம்பத் தமிழ்ப்பள்ளி 55 ஆயிரத்துக்கான  காசோலைகளை  பெற்றுக் கொண்டன.

பள்ளிகளுக்கு  நிதி வழங்கும் நிகழ்வில் மாநில மந்திரி புசாருடன், மாநில இஸ்லாமியச் சமய விவகாரங்கள், பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜாவாவி அகமது முக்னி

சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், இஸ்லாம் அல்லாதோர் சமய விவகார சிறப்புக் குழு இணைத் தலைவராகவும் உள்ள மாண்புமிகு வீ. கணபதிராவும் கலந்து கொண்டனர்.


Pengarang :