ANTARABANGSAECONOMYNATIONALSUKANKINI

சுக்மா 2022- வூஸூ போட்டியில் சிலாங்கூருக்கு முதல் பதக்கம்

ஷா ஆலம், செப் 14- இருபதாவது மலேசிய போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் மாநிலம் வூஸூ விளையாட்டின் வாயிலாக தனது முதல்  பதக்கத்தைப் பெற்றது.

புக்கிட் ஜாலில்  தேசிய விளையாட்டு மன்ற காம்ப்ளெக்சில் நடைபெற்ற இப்போட்டியில் வூஸூ விளையாட்டாளர் மேண்டி செபிலி சென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மொத்தம் 9.643 புள்ளிகளுடன் மலாக்காவை சேர்ந்த சிட்னி ஷை சின் ஷூவான் தங்கப் பதக்கம் வென்றார். 9.6200 புள்ளிகளுடன் மேண்டி இரண்டாம் இடத்தைப் பெற்ற வேளையில் சரவா மாநிலத்தின் யோங் அரிபா கைருடின் 9.5830 புள்ளிகளுடன் மூன்றாவதாக வந்தார்.

இம்மாதம் 16 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சுக்மா போட்டியில் 40 தங்கப் பதக்கங்களுடன் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.


Pengarang :