ECONOMYSELANGOR

நாளை மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், செப் 14-  மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த விற்பனை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

சபாக்கில் உள்ள பாரிட் நெல் அடிக்கும் இடம், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள புத்ரி சென்ட்ரல் பார்க், பண்டார் ரிஞ்சிங் 1 மற்றும் 2,  கம்போங் கெமென்சே உலு கிள்ளான்,  ஜாலான் புக்கிட் பாடாக், சுபாங் தேசிய பள்ளி, பெர்சியாரான் ஹம்சா ஆலாங், பிலால் இப்னு ரபா சூராவ் ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறும்.

இது தவிர, தாமான் செம்பாக்கா 1, பத்து 4, ஜாலான் காப்பார் மற்றும் பண்டார் சவுஜானா புத்ரி ஆகிய இடங்களிலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் கோழி, இறைச்சி, மீன், முட்டை, அரிசி, சமையல் எண்ணெய் ஆகிய ஆறு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மலிவான விலையில் விற்கப்படும்.
கடந்த ஆகஸ்டு 31 முதல் டிசம்பர் 31 வரை மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் மாநில மக்கள் எதிர்நோக்கி வரும் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த திட்டத்தை பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக மாநில அரசு நடத்துகிறது.

இத்திட்டம் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.


Pengarang :