ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

சுக்மா 2022- கராத்தே ஆண்கள் அணி மூலம் சிலாங்கூருக்கு ஐந்தாவது தங்கம்

ஷா ஆலம், செப் 18-  மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) நேற்றிரவு நடந்த குமித்தே பிரிவு ஆட்டத்தில்  ஆண்கள் கராத்தே அணியினர் சிலாங்கூர் மாநிலத்திற்கு  ஐந்தாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழக விளையாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றியின் வழி மாநிலத்திற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இந்தப் போட்டியில்  பெண் கராத்தே வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்தை வென்றதாக  சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.

நேற்றிரவு, சிலாங்கூர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது, அவை பெந்தாங் போட்டியில் அய்ஷெக் ஹக்கிமி சஃபிங்கன் மூலமாகவும்   அம்பு எறிதல் போட்டியில் முகமது அலிப் அய்மான் முகமது ஹஸ்ரி வாயிலாகவும் பெறப்பட்டன.

முதல் தங்கத்தை வூஸூ  வீரர் மேண்டி சிபில் சென் பெற்றுத் தந்தார். இரண்டாவது தங்கப் பதக்கத்தை 75 கிலோவுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான தனிநபர் குமித்தே போட்டியில் எம். கோகுல்நாத் பெற்றார்.

செப்டம்பர் 16 முதல் 24 வரை நடைபெறும் இந்த சுக்மா போட்டியில் 40 தங்கம், 40 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

20வது சுக்மாவில் இடம் பெற்றுள்ள 30 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 490 விளையாட்டு வீரர்கள் மற்றும் 75 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.


Pengarang :