ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், தீயணைப்புத் துறை ஏற்பாட்டில் வெள்ள மீட்பு பயிற்சி 

ஷா ஆலம், செப் 24– வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான பயிற்சியை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தாசேக் பூச்சோங் பிரிமாவில் நேற்று நடத்தியது.

வடக்கிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு அபாயத்தை எதிர்கொள்ளும் நோக்கிலான இந்த பயிற்சி சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ள மீட்பு பயிற்சி மற்றும் நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் மாதிரி செயல்முறை பயிற்சியில் பெட்டாலிங் மாவட்ட நில மற்றும் கனிமவளத் துறையினர் மற்றும் பந்தாஸ் பணிப்படையினர் பங்கு கொண்டனர்.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் எட்டு வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், உலு லங்காட், சிப்பாங், கோல லங்காட், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் ஆகியவையே வெள்ள பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அந்த எட்டு மாவட்டங்களாகும்.


Pengarang :