ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

தீபாவளி முன்னிட்டு பத்து கேவ்ஸ் தொகுதியில் 950 பேருக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகள் விநியோகம்

கோம்பாக், அக் 2- இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியிலுள்ள 950 இந்திய குடும்பங்களுக்கு தலா 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

மாநில அரசின் பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் மூலம் 450 பற்றுச் சீட்டுகளும் சட்டமன்றத் தொகுதியின் நிதி ஒதுக்கீட்டில் எஞ்சிய பற்றுச் சீட்டுகளும் விநியோகம் செய்யப்படுவதாக  தொகுதிக்கான மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஏ அப்துல் ரஹிம் காஸ்டி கூறினார்.

இந்த தொகுதியில் அதிகமான இந்தியர்கள் வசிப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொகுதிக்கான மானியத்தைப் பயன்படுத்த மந்திரி புசார் முன்வந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய உதவித் திட்டங்களுக்கு தொகுதி நிதியைப் பயன்படுத்தும் நடைமுறை அண்மைய சில ஆண்டுகளாக அமலில் உள்ளதாக கூறிய அவர், இந்த பற்றுச் சீட்டுகள் வரும் 16 ஆம் தேதி ஸ்ரீ தெர்னாக்  செலாயாங் பாரு பேரங்காடியில் விநியோகம் செய்யப்படும் என்றார்.

இன்று இங்குள்ள செலாயாங் மூலியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை இலக்காக கொண்டு மாநில அரசு இந்த பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் நீண்டகால முன்னெடுப்பாக இந்த திட்டம் அமைந்துள்ளது.


Pengarang :