ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள நிவாரணப் பணியில் 700 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் பங்கேற்பர்

ஷா ஆலம், அக் 4- இவ்வாண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை எதிர் கொள்ள 700 தன்னார்வலர்களை உள்ளடக்கிய நிவாரணப் பணிக்குழுவை டீம் சிலாங்கூர் தயார் நிலையில் வைத்துள்ளது.

இவர்களில் 200 பேர் பேரிடர் மற்றும் மலேசிய பொது தற்காப்பு படையின் நடவடிக்கை உறுப்பினர் (ஏ.பி.எம்.) பயிற்சியையும் மேற்கொண்டுள்ளதாக அதன் செயலகத் தலைவர் ஷியாஸெல் கெமான் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதாக உதவுவதற்கு ஏதுவாக பாதுகாப்பு தொடர்பான நுணுக்கங்களைத் தெரிந்திருக்கும் வகையில் அந்த தன்னார்வலர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், அம்பாங், உலு லங்காட், கோல லங்காட், கிள்ளான், காஜாங் ஆகிய பகுதிகளில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

வெள்ள சமயத்தில் தேவையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தன்னார்வலர்கள் அனுப்பப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பொது அவசர நடவடிக்கை குழுவில் பதிவு செய்வது தொடர்பில் ஏ.பி.எம்.மின் அங்கீகாரத்திற்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

வழக்கமாக, பேரிடர் பகுதிகளில் தன்னார்வலர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த அங்கீகாரம் இருக்கும் பட்சத்தில் மீட்புப் பணிகள் ஏ.பி.எம். உறுப்பினர்களுக்கு உதவ முடியும் என்றார் அவர்.


Pengarang :