ECONOMYSELANGORTOURISM

தலைசிறந்த சுற்றுலா மையமாக சிலாங்கூர் திகழ்வதற்கு சிறப்பான இரு வழி உறவுகளே காரணம்

ஷா ஆலம், அக் 4- சிறப்பான இரு வழி உறவுகள் மற்றும் இதர நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுத் திட்டங்கள் ஆகியவை உலகின் தலைசிறந்த சுற்றுலா மையங்களில் ஒன்றாக சிலாங்கூர் விளங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும், சிலாங்கூருக்கு கூடுதல் அனுகூலமாக விளங்கும் சிறப்பான நுழைவாயில்களும் கடந்தாண்டில் 1 கோடியே 2 லட்சம் சுற்றுப்பயணிகளை மாநிலம் ஈர்ப்பதற்கு துணை புரிந்தது என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத் திட்டங்களை அமல்படுத்துவது மற்றும் நடப்புத் தேவைக்கேற்ப போட்டியிடும் ஆற்றலை அதிகரிப்பது போன்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மாநில சுற்றுலாத் துறையைப் புதுப்பிப்பது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தாம் அண்மையில் பேங்காக் நகருக்கு சமூகம் சார்ந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

கோல குபு பாரு, சிகிஞ்சான் வயல்வெளி, கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயம், காஜாங் பாரம்பரிய மையம் மற்றும் மா மேரி கலாசார கிராமம் ஆகியவை அந்த சுற்றுலா மையங்களில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :