ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கடல் பெருக்கு- கோல லங்காட் கடற்கரைகள் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும்

ஷா ஆலம், அக் 24 - கடல் பெருக்கு அபாயத்தை கருத்தில் கொண்டு  நாளை முதல்  வெள்ளிக்கிழமை வரை பந்தாய் மோரிப், பந்தாய் கிலானாங், பந்தாய் பத்து லாவுட், பந்தாய் சுனாங்,  பந்தாய் மோரிப் பாரு கடற்கரைகள் மற்றும்  தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகிய பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்படவுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மேல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு   நுழைய வேண்டாம் என்று கோல லங்காட் நகராண்மைக்கழகம் அறிவுறுத்தியது.

இக்காலக்கட்டத்தில் கடற்கரையில் நீர் விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் வணிகம் புரிவதற்கு அனுமதிக்கப்படாது.

 பரஸ்பர பாதுகாப்பை உறுதிப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது  என்று நகராண்மைக் கழகம் தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

மேல் விபரங்களுக்கு 03-31872825 என்ற எண் மூலமாக அல்லது 012-3004891 / 012-3004256 என்ற வாட்ஆப் புலனம்  மூலமாக நகராண்மைக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Pengarang :