Dato’ Menteri Besar Selangor Dato’ Seri Amirudin Shari menyampaikan sumbangan pembaikan infrastruktur sekolah ketika Program bersama penggerak masjid Jelajah Selangor Penyayang Sepang di Masjid Taman Putra Perdana Puchong, Sepang pada 29 Oktober 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிப்பாங்கில் 2038 வரை 4,665 சிலாங்கூர்கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

சிப்பாங், அக் 30- சிப்பாங் செரேனியா சிட்டி திட்டத்தின் வாயிலாக 2022 முதல் 2038 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பண்டார் செரேனியாவில் 4,665 சிலாங்கூர்கூ வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

இன்று இங்கு நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் அந்த  வீடமைப்புத் திட்டத்திற்கான மாதிரி சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து  கொண்டார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் பண்டார்  செரேனியாவில் 432 சிலாங்கூர்கூ வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு அடுத்தாண்டில் பொது மக்கள் அங்கு குடியேறுவதற்கு உரிய    வாய்ப்பு ஏற்படும்.

இந்த நிகழ்வில் சிப்பாங் அமலியா 1 மற்றும் அமாலியா 2 திட்டங்களில் சிலாங்கூர் கூ வீடுகளை வாங்கிய 10 பேருக்கு  மந்திரி  புசார் அங்கீகாரக் கடிதங்களை வழங்கினார்.

மேலும், சிப்பாங்கில் ஸ்மார்ட் சேவா எனும் வாடகை கொள்முதல் திட்டத்தின்  கீழ் 57 வீடுகளை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் பெருமாஹான் டான் ஹர்த்தானா சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வையும் மந்திரி பெசார் பார்வையிட்டார்.

கடந்த 2018 முதல் கடந்த நவம்பர் வரை 24,428 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 


Pengarang :