Pengerusi Pakatan Harapan (HARAPAN) Datuk Seri Anwar Ibrahim bersama barisan pimpinan ketika Majlis Peluncaran Tawaran HARAPAN di Hotel Wyndham Acmar Klang pada 2 November 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளில் 10 கடப்பாடுகள், ஊழல், இளைஞர்,கல்வி, மகளீர், சமத்துவம் மற்றும் பல

கிள்ளான், நவ 2:  15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவது ஆகியவை உட்பட,  பக்காத்தான் ஹராப்பான் 10  கொள்கைகளில் அடங்கும். வாழ்க்கைச் செலவீனத்தை  குறைத்து, ஊழலை எதிர்த்து, இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி அமைப்பது  பக்காத்தான் ஹராப்பான் 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அடங்கும்

அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேலை வாய்ப்புகள், கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், கவனம் செலுத்த வேண்டிய இதர  அம்சங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் குறைகள் நீக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

“கடந்த 30 மாதங்களில் பாரிசான் நேசனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியால்  அழிக்கப்பட்ட மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்ப ஹராப்பான் உறுதியாக உள்ளது.

“ஹரப்பான் கொள்கை அறிக்கையில்,  கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள  அம்சங்கள்  மலேசியாவை முன்னோக்கி நகர்த்த முடியும்” என்று ஹராப்பான் அதன்  கொள்கை அறிக்கையை இன்று  இங்கு அறிமுகப்படுத்திய போது கூறியது.

ராப்பான் 10  அம்சங்கள்  சுருக்கமாக இங்கே:

வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளை தீர்க்கவும்

– கார்டெல்களை(இடைதரகர்)  அகற்றுதல், உணவு விநியோகத்திற்கு உத்தரவாதத்தை உறுதி செய்வதற்காக, விவசாயத் துறையில் தொழிலாளர்களின் நிலைக்கு கூடுதலாக ஊக்கமளிப்பது டன், மூலப்பொருட்கள் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்தல்.

ஊழலை ஒழித்து ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவது

– ஊடக சுதந்திரம் மற்றும் பொது மக்களின் பேச்சுரிமைக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் நிறுவனங்களின் ஒருமைப்பாடு மற்றும் பாராளுமன்றத்தின் இறையாண்மையை பலப்படுத்துவது மூலம் தூய்மையான நிர்வாகத்தை உருவாக்குதல்

சக்திவாய்ந்த இளைஞர் பொருளாதார வாய்ப்புகள்

– பராமரிப்புத் துறை, ஆக்கப்பூர்வமான கலைகள் மற்றும் மின்-விளையாட்டுகள் ஆகியவற்றுடன் கூடுதலாக நவீன விவசாயத் துறை பங்கேற்பு போன்ற முயற்சிகள் உட்பட இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்

பாதியில் கல்வியை கைவிடும் தலைமுறையைக் காப்பாற்றுவது

– கல்வியில் உள்ள இடைவெளியை நீக்கி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அனைத்து மலேசிய குழந்தைகளுக்கும், சிறந்த கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது.

பேரிடரை எதிர்க்கும் திறனை உருவாக்குதல், பாதுகாப்பை பலப்படுத்துவது

– ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகபட்சமாக RM50,000 வரை இழப்பின் மதிப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட உதவியை மேம்படுத்துவது

ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்னைக்கு தீர்வு, சுகாதார பணியாளர்கள் நலனுக்கு உத்தரவாதம்

– பொது சுகாதார சேவைகளின் திறனை மேம்படுத்த சுகாதார ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைக்கு  தீர்வு காண்பது உட்பட உள்ளூர் நிபுணத்துவத்தை உருவாக்குவது.

பாலின சமத்துவமின்மை நீக்குதல்,

– பாலின சமத்துவமின்மை நீக்குதல் மற்றும் பெண்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது

பெர்காசா (மேம்படுத்தல்) சபா மற்றும் சரவாக்

–    அங்கிருந்து பெறும் வருமானத்தை அம்மாநில பொருளாதார மேம்பாடுக்கு திரும்ப அளிப்பது மற்றும் சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற தொகுதிகளில் 35 சதவீதமாக உயர்த்த முன்னுரிமை அளிப்பது.

மக்களின் போட்டி தன்மையின் நிலை

– பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஊனமுற்றோர் உட்பட எந்த மக்களும் நாட்டின் செழிப்பை அனுபவிப்பதில் இருந்து விடு படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்பது.

– காலநிலை மாற்ற சட்டம், சுற்றுச்சூழல் நிதி பரிமாற்றம், கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பாதுகாக்கும் எல்லை தாண்டிய மூடுபனி சட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல்

ஹராப்பான் வாக்குறுதிகளின் முழு ஆவணத்தையும் kitaboleh.my பக்கத்தின் மூலம் படிக்கலாம்

ஹராப்பான் துணைத் தலைவர் அந்தோணி லோக், அமானா நெகாரா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர் சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Pengarang :