ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய முன்னணி ஆட்சியில் கோவிட் 19 நோயால் 36,000 பேர் பலி.

 

ஈஜோக்.நவ.14–  22 மாத ஆட்சியில் நம்பிக்கை கூட்டணி எதை கிழித்தது என்று தேசிய முன்னணி தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் 31 மாத ஆட்சிக் காலத்தில் கோவிட் 19 பெரும்  தொற்று நோய்க்கு 36,000 பேர் பலி கொடுத்தனர் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து அம்பலப்படுத்தினார்.

நம்பிக்கை கூட்டணி சிறப்பாக ஆட்சி செய்துக் கொண்டிருந்தது. கொள்ளைப் புறம் ஆட்சியை கைப்பற்றி நாட்டு மக்களை கோவிட் 19 பெருந்தொற்றுக்கு   காவு கொடுத்து விட்டனர்.

மேலும் இதே காலகட்டத்தில் பல கோடி ரிங்கிட் முறையான டெண்டர் இன்றி செலவு செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக இந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் கைரி ஜமாலுதின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் போது நிகழ்ந்துள்ளது.

இந்த தடுப்பூசி கொள்முதல் விவகாரத்திலும் முறையான டெண்டர் விடப்படவில்லை. இப்படி பல்வேறு முறைகேடுகள் செய்தவர்களுக்காக வாக்களிக்கப் போகிறீர்கள் என்று வாக்காளர்களை பார்த்து வினவினார். அதற்கு வாக்காளர்கள் ” இல்லை ” என்று ஒட்டு மொத்தமாக கூறினர்.

தொடர்ந்து பேசிய அவர் நாட்டு தலைவர் என்ற முறையில் இன பாகுபாடு இன்றி அனைவரையும் அரவணைத்து செல்வது எனது கடமை. இந்தியர், சீனர், மலாய்க்காரர்கள், சபா, சரவாக் மாநிலத்தில் உள்ள அனைவரையும் எந்தவித பாகுபாடும் இன்றி வழி நடத்துவது எனது கடமை. தீபகற்ப மலேசியாவில் இந்தியர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளனர். இதே போல் மலாய்க்காரர்கள் உண்டு.அனைவருக்கும் எந்த வித பாகுபாடும்  இன்றி வறுமையை ஒழிக்க பாடு படுவேன் என்று அவர் மேலும் கூறினார்.

கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சூல்கிப்ளிக்கு ஆதரவாக ஏற்பாடு  செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

 

செய்தி – சுப்பையா சுப்ரமணியம்


Pengarang :