ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மத்திய இந்தோனேசியாவில் மிதமான நில நடுக்கம்

ஜகார்த்தா, நவ 21- மத்திய இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  ரிக்டர் அளவில் 5.5 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த  நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 20:49 மணிக்கு  நிகழ்ந்ததாக சின் ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.  மாகாணத்தின் குபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 51 கிலோ மீட்டர் தொலைவில்  கடலுக்கு அடியில் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்தது என்று நிறுவனம் கூறியது.

Pengarang :