Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari diiringi Pengarah Lembaga Pemasaran Pertanian Persekutuan (FAMA) Kuala Lumpur A Rahman Suleman (kiri) melihat ayam yang dijual di pasar pagi FAMA, Selayang Baru, Selayang pada 12 Disember 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

செலாயாங் பாரு காலை சந்தை புதிய இடத்திற்கு மாற்றலாகவுள்ளது -மந்திரி புசார்

கோம்பாக், டிச 12: இங்கு அருகில் உள்ள செலாயாங் பாரு காலை சந்தையில் சுமார் 40 வர்த்தகர்கள் வணிக நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்கு ஒரு சிறப்பு தளத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

புதிய நிலத்திற்கான விண்ணப்ப செயல்முறை முடிந்துவிட்டதாகவும்,  தற்போது உள்ள வணிகத் தளத்திற்கு அருகில் தான் அப்புதிய இடம் இருப்பதாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கூறினார்

“இந்த சந்தையை மத்தியச் சந்தைப்படுத்தல் வேளாண் வாரியம் (ஃபாமா) இயக்குகிறது. அனைத்து வர்த்தகர்களுக்கும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இருக்கும் வகையில் ஒழுங்கமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்,” என்றார்.

இன்று கோம்பாக் மாவட்ட அதிகாரி நோர் அஸ்லினா அப்துல் அஜீஸ் மற்றும் ஃபமா கோலாலம்பூர் இயக்குனர் ஏ ரஹ்மான் சுலைமான் ஆகியோருடன் சந்தையைப் பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

வியாபாரிகளுடன் நட்புறவாக பழகுவதுடன், அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அப்பகுதியின் வடிகால் அமைப்பையும் அமிருதீன் ஆய்வு செய்தார்.

கோழி, மீன், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அன்றாட தேவைகளை விற்கும் காலை சந்தை தினமும் காலை மணி 7 முதல் மதியம் மணி 12 வரை திறந்திருக்கும்.


Pengarang :