ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

லா நினா பருவநிலை மாற்றம் பிப்ரவரி வரை நீடிக்கும்- அதிக மழை பெய்யும் சாத்தியம்

ஷா ஆலம், ஜன 3- தற்போது நாட்டில் நிலவி வரும் லா நினா
பருவநிலை மாற்றம் வரும் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் வளி மண்டலச் சுழற்சி லா நினா
பருவநிலை மாற்றத்துடன் 50 சதவிகிதம ஒத்துப் போவதாக மலேசிய
வானிலை ஆய்வுத் துறை கூறியது.
இம்மாதம் தீபகற்ப மலேசியாவில் பெரும்பாலான மாநிலங்கள் சராசரி 250
மில்லி மீட்டர் முதல் 800 மில்லி மீட்டர் வரையிலான மழையை பெறும்
என எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.
சபா மற்றும் லபுவானிலும் மழைப்பொழிவு காணப்படும். எனினும்,
குறைந்த அளவில் அதாவது 100 முதல் 300 மில்லி மீட்டர் வரை மட்டுமே
இருக்கும் என அத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் நாடு அனுபவித்து வரும் வடகிழக்கு
பருவ மழை காலம் வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வடகிழக்கு பருவமழையின் காலத்தில் வடகிழக்கிலிருந்து காற்று
மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் தென்
சீனக் கடலில் பேரலைகள் ஏற்படும் என்பதோடு கடல் சீற்றத்துடனும்
காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Pengarang :