ECONOMYMEDIA STATEMENT

சவால் மிக்க வணிகத்துறையில் நம்மவர்களுக்கு அதிக உதவி தேவை

கோல லங்காட்  ஜன ;– இந்தியச் சிலாங்கூர் தொழில் முனைவோர் மேம்பாடு   ஐ-சிட் திட்டம் வழி  கோல லங்காடில் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்துவரும் அருள் மாறனுக்கு ரிங்கிட் 4400 மதிப்புள்ள  ஒரு உணவு பதனிடும் கருவி  வழங்கப்பட்டது.

இந்த  இலாகாவின் (ஐ-சீட்)  தொடர்புத்துறை அதிகாரியான  கண்மணி லட்சுமணன்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட  கருவி  வழங்கப்படும்  நிகழ்வில்  கோல லங்காட்  நகராண்மைக் கழக உறுப்பினர்கள் திரு  ஹரிதாஸ், திரு. சுப்ரா மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

சவால் மிக்க வணிகத்துறையில் நம்மவர்களுக்கு அதிக உதவி தேவை, வணிக உபகரண உதவி வழங்கும் திட்டம், பல தொழில் முனைவோர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது, இந்தத் திட்டம் வரும் ஆண்டுகளில்  தொடரப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்தியச் சிலாங்கூர் தொழில் முனைவோர் மேம்பாடு ஐ-சிட் திட்டம் இந்த ஆண்டு 1 மில்லியன் ஒதுக்கீட்டில் தொடர்வதாக  சமூகப் பொருளாதார மேம்பாடு எஸ்கோ வீ.கணபதிராவ் தெரிவித்துள்ளார்..


Pengarang :