ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் இவ்வாண்டு தைப்பூச விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்- கணபதிராவ் 

ஷா ஆலம், ஜன 31- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய ஆலயங்களில் இவ்வாண்டு தைப்பூச விழா மிகவும் கோலாகலமாக  கொண்டாடப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விழாவின் போது பத்துமலைத் திருத்தலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டு வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நிலையான செயலாக்க விதிமுறைகள் (எஸ்.ஓ.பி.) காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தைப்பூச விழா மிதமான அளவில் கொண்டாடப்படும் நிலையில் இவ்வாண்டு அவ்விழா மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் தாய்கோவிலாக விளங்கும் பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் பத்து லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

பத்துலை திருத்தலம் தவிர்த்து, கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் மற்றும் கோல சிலாங்கூர், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் ஆகியவை சிலாங்கூரில் தைப்பூசத்திற்கு பிரசித்தி பெற்ற இதர இரு ஆலயங்களாக விளங்குகின்றன.

இம்முறை கெர்லிங் ஆலயத்தில் 20,000 பக்தர்களும் கோல சிலாங்கூர் ஆலயத்தில் 50,000 பக்தர்களும் கலந்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவர் என்றார் அவர்.

 

பெர்னாமா


Pengarang :