ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு முதல் இரு தங்கங்களை-  ஷாமளராணி, பிரேம் குமார் பெற்றுத் தந்தனர்.

புனோம் பென், மே 7- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டியில் மலேசியாவுக்கு முதல் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்ததன் மூலம் கராத்தே அணியினர் நாட்டின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் சீ விளையாட்டு போட்டியில், புள்ளி பட்டியல் மலேசியா மிக தாழ்ந்த நிலையில் இருந்தது. மலேசிய விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் நாட்டின் முதல் தங்கத்தை நேற்று நடைபெற்ற ஐம்பது கிலோவுக்கும் கீழ்ப்பட்ட குமித்தே மகளிர் கராத்தே போட்டியில் நடப்பு வெற்றியாளரான சிஷாமளராணி நாட்டிற்கு பெற்றுத் தந்தார்.

ஷெரேய் சங்வாட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 2022ஆம் ஆண்டு உலக வெற்றியாளரான பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜூன்னா ட்ஸ்க்கி வில்லனுவாவை ஷாமளராணி வெற்றி கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்திதல் வில்லானுவா 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தார். பின்னர் ஷாமளராணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிக் கணக்கை 1-1 என சமநிலை படுத்தினார். எதிராளியை விட மிகவும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப் படுத்தியற்காக மலேசிய வீராங்கனை இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 2019ஆம் ஆண்டு வெற்றியாளரான எஸ்.பிரேம்குமார் 55 கிலோவுக்கும் கீழ்ப்பட்ட குமித்தே ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று மேலும் ஒரு தங்கத்தை நாட்டிற்கு பரிசாக அளித்தார்.

இடது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் உண்டான வலியையும் பொருட்படுத்தாமல்  ஆட்டத்தைத் தொடர்ந்த அவர் தனது எதிராளியான தாய்லாந்தின் சான்பெட் செட்டாபோங்கை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Pengarang :