ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENT

கோலசிலாங்கூர் நகராண்மை கழகம் (zon 8) ஏற்பாட்டில் சேலைக் கட்டும் பயிற்சி

செய்தி . மாரி. சிவகுமார்

 

கோலசிலாங்கூர் மே 8; கோலசிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி :நந்தகுமாரி சிங்காரம் (zon 8)  அவர்களின் ஏற்பாட்டில் சேலைக் கட்டும் பயிற்சி பட்டறை ஒன்று தாமான் ராஜாவளி குடியிருப்பு பகுதி பாலாய் ராயாவில் சிறப்பாக நடை பெற்றது.

சுமார் 30 -பெண்கள் பங்குகொண்ட சேலைக் கட்டும் பயிற்சி பட்டறையின் முதல் அங்கமாகக்  கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி சூல் கிப்லி அமாட் அவர்களின் பிரதிநிதி  செல்வி அவர்கள் இப் பயிற்சி பட்டறையை  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோலசிலாங்கூர் கெ அடிலான் தலைவர் தீபன் சுப்ரமணியம்  இப்பயிற்சிக்கு தலைமை தாங்கி  இன்றைய பெண்களுக்கு இதுபோன்ற பயிற்சியில் கலந்து கொள்வது  மிக அவசியம். என்றார்.  இது போன்ற பயிற்சிகளை நாம் கற்றுக் கொள்வதன் மூலம்  நாமும்  சேலை வியாபாரத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்றார்.

மேலும் அவர் தமது உரையில்  திறமையான பெண்கள்  பலர் இலைமறைகாயாக இருப்பதை, இது போன்ற பயிற்சி பட்டறைகள் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவும் என்றார்.  .அதே சமயத்தில்  இதுபோன்ற  கைத்தொழில் செய்பவர்களுக்கு எஸ்.எஸ்.எம் உரிமத்தை  இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும் நமது அரசாங்கம் பி40 -தரப்பினருக்கு வழங்கியுள்ளது. இது குறித்து மேல் விபரங்களுக்கு  இப்பிரிவின் சம்பந்தப்பட்ட அதிகாரியையும் இப்பகுதிக்கு  விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

சுமார் .சுமார் 4 -மணி நேரம் நடைபெற்ற இந்தச் சேலைக் கட்டும் பயிற்சி பட்டறைக்கு,  சித்தம் இயக்குனர் கென்னத் சேம் அவர்களும் கலந்து  சிறப்பு சேர்த்தார்.  நிறைவாகச் சேலைக் கட்டும் பயிற்சி பட்டறைக்கு வருகை அளித்த அனைவருக்கும் தனது  மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக் கொண்டார் இப்பயிற்சியின் ஏற்பாட்டாளரும்,கோலசிலாங்கூர்  நகராண்மைக் கழக உறுப்பினருமான திருமதி: நந்தகுமாரி சிங்காரம்.


Pengarang :