EKSKLUSIFMEDIA STATEMENT

இன்றிரவு தாமான் ஸ்ரீ கோம்பாக், சிலாங்கூர் ஐடில்ஃபிட்ரி திறந்த இல்ல உபசரிப்புக்கு அனைவருக்கும்  அழைப்பு – டத்தோ மந்திரி புசார் .

கோலசிலாங்கூர், மே 14: டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் மக்களை, குறிப்பாக கோம்பாக் குடிமக்களை, இன்றிரவு  தாமான் ஸ்ரீ கோம்பாக்  வணிகப் பகுதி 3 றில்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிலாங்கூர் ஐடில்ஃபிட்ரி சுற்றுப்பயணத்தை (JKSA) கலந்து சிறப்பிக்க அனைவருக்கும்  அழைப்பு விடுத்தார்.

மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல (ஓபன் ஹவுஸு) ஏற்பாட்டாளர்களுடன்  இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மே 13, 2023 அன்று கோலா சிலாங்கூர் புக்கிட் பாடோங் திடலில், கோல சிலாங்கூர் மாவட்ட அளவிலான  சிலாங்கூர் டூர் ஐடில்ஃபிட்ரி  திறந்த இல்லத்தில்  (ஓபன் ஹவுஸுடன்)  உரை நிகழ்த்திய டத்தோ மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த அழைப்பை விடுத்தார்.

“இந்த ஆண்டு  நடைபெறும்  மாநில திறந்த இல்லத்தை உற்சாகப்படுத்த கோம்பாக் மக்களையும் சிலாங்கூர் மக்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சியாவாலின் போது தொடர்ந்து மூன்று நாட்கள்   JKSA சிப்பாங், உலு சிலாங்கூர், கிள்ளான், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இது கோம்பாக்கில் முடிவடைவதற்கு முன்பு டத்தாரன் தனா லைசென், கம்போங் பாரிட் பாரு, சபா பெர்ணமில் (மே 12), புக்கிட் படோங் பொதுத் திடலில், கோல சிலாங்கூர் (மே 13) ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

முன்னதாக, இந்த சுற்றுப்பயணம் மக்களும் தலைவர்களும் சந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்  தருவதாக அமைந்துள்ளதாக  அமிருடின் கூறினார்.


Pengarang :