ALAM SEKITAR & CUACAECONOMY

வறட்சி காலத்தில் போதிய நீர் விநியோகத்தை உறுதி செய்யும்  திட்டம்

கோலா சிலாங்கூர், 14 மே:  நீர் வழங்கல் தடைகளைச் சமாளிக்க மாநில அரசால் செயல்படுத்தப் பட்டுவரும்  மூல நீர் உத்தரவாதத் திட்டம் (SJAM) இந்த அக்டோபரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்று டத்தோ மந்திரி புசார்  தெரிவித்தார்.

RM300 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிலான திட்டமானது சுங்கை சிலாங்கூரின்  முனையிலிருந்து   கடல் நோக்கிச் செல்லும் முகத்துவாரம் வரை நீரோட்டத்தில் ஏற்படும் மாசு அபாயத்தைக் குறைக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, நான்கு கட்ட திட்டமானது, மாநிலம் வறட்சியை எதிர்கொண்டால், போதுமான அளவு கச்சா நீர் வழங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்திடமிருந்து (LUAS) தாங்கள் பெற்ற அறிக்கையின் அடிப்படையில், சிலாங்கூரில் வெப்பமான வானிலை அல்லது எல் நினோ நிகழ்வை எதிர்கொண்டால், அனைத்து அணைகளும் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை நீர் இருப்பைக் கொண்டு இருப்பதை உறுதி செய்வது .

அதைத் தவிர  SJAM திட்டத்தின் மூலம் மூல நீர் இருப்புகளை அதிகரிக்கவும் பராமரிக்கவும் வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மே 13, 2023 அன்று கோல சிலாங்கூர் புக்கிட் பாடோங் பொதுத் திடலில், மாவட்ட ரீதியாக நடைபெற்றுவரும்  டூர் ஐடில்ஃபிட்ரி (ஓபன் ஹவுஸ்)  திறந்த இல்ல உபசரிப்பில்  பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

புக்கிட் படோங்கில் சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 (SSP1), கட்டம் 2 (SSP2) மற்றும் கட்டம் 3 (SSP3) ஆகியவற்றின் நீர் சுத்திகரிப்பு நிலையம் (LRA) உள்ளது, இங்கு ஏற்படும் நீர் மாசுபாடு , அடிக்கடி நீர் விநியோக தடையை ஏற்படுத்துகிறது. அதனை மேம்படுத்த  SJAM சிறப்பு திட்டம் தயார் செய்யப்படுவதாக  அவர் விளக்கினார்.

“எதிர்காலத்தில் சிலாங்கூர் LRA (SSP1), (SSP2) மற்றும் (SSP3) இல் மாசு இருந்தால், அக்டோபரில் SJAM தயாராக இருக்கும் போது, நீர் விநியோகம் தடையின்றி செயல்பட முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் 2023 பட்ஜெட்டில், SJAM ஐ வெற்றிகரமாக்க RM332 மில்லியனை ஒதுக்குகிறது, இதில் மாசு ஏற்பட்டால் LRA செயல்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்க RM100 மில்லியன்ஒதுக்கப்பட்டுள்ளது.

LUAS சட்டத்தின் திருத்தம் மற்றும் LUAS ரேபிட் ஸ்குவாட் கண்காணிப்பு உள்ளிட்ட பல தீர்வு நடவடிக்கைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் 21 பிப்ரவரி 2023 அன்று ரிவர்சைடு ஹைப்ரிட் அப்கிரேட் சிஸ்டம் (HORAS) 600 ஐ கண்காணிக்கிறது, இது ஒவ்வொரு நாளும் நீரைக் கையாள்வதுடன், வறட்சியான காலத்திலும் 100 நாட்களுக்கு மாற்று மூல நீர் விநியோகத்திற்கு இடமளிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.


Pengarang :