ALAM SEKITAR & CUACANATIONALTOURISM

ஹஜ்ஜூப் பெருநாளின் போது 10 லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும்

ஜோகூர் பாரு, ஜூன் 29-  ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டுச் சிங்கப்பூரிலிருந்து ஜொகூர்
பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலை (லிங்கெடுவா) வழியாக  இன்று பத்து லட்சம் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓப்ஸ் லஞ்சார் நடவடிக்கையில்  47 & 39  ஹாட்ஸ்பாட்39 மற்றும் 27 &39;
 பிளாக் ஸ்பாட்39;  பகுதிகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜோகூர் துணை போலீஸ் தலைவர் டிசிபி எம்.குமார் தெரிவித்தார்.
இங்குள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் (பி.எஸ்.ஐ.) உள்ள சுங்க, குடிநுழைவு மற்றும்
தனிமைப்படுத்தல் (சி.ஐ.க்யூ.) வளாகத்திலும் இஸ்கந்தார் புத்ரியில் உள்ள சுல்தான் அபு பக்கர்  மையத்திலும் (கே.எஸ்.ஏ.பி.) சீரான போக்குவரத்தை உறுதி செய்வதில் ஓப்ஸ் லஞ்சார்   கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
இந்தச் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது வரிசையை முந்திச் செல்லுதல், அவசரத்
தடத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு கடும் குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படும்
என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜொகூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த மொத்தம் 261
உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஒப்ஸ் லஞ்சார்  நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் .
முன்னதாக, நகரைச் சுற்றி மதியம் 2 .00 மணியளவில் பெர்னாமா நடத்திய ஆய்வில்,
ஜோகூர் பாலத்தின் மத்தியில்  இருந்து சிங்கப்பூர் நுழைவாயில் வரையிலான பகுதியில்
போக்குவரத்து மெதுவாகவும் சீராகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

Pengarang :