ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

தாமான் ஸ்ரீ மூடா உட்பட ஒன்பது இடங்களில் நாளை ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 22- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏசான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை காலை 10.00 மணி தொடங்கி ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான விற்பனை கம்போங் சிஜாங்காங்கிலும் கோல சிலாங்கூர் தொகுதி நிலையிலான விற்பனை பத்தாங் பெர்ஜூந்தை ஆஜாப் கார் கழுவும் மையம் அருகிலும் நடைபெறும் என்று அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

மேலும் சுபாங் தொகுதி நிலையிலான விற்பனை எஸ்.எஸ்.19 அடுக்குமாடி குடியிருப்பிலும் தஞ்சோங் காராங் தொகுதியில் கம்போங் டாமாய் ஹாஜார் சீஃபூட் வளாகத்திலும் கோத்தா ராஜா தொகுதியில் தாமான் ஸ்ரீ மூடா ஜாலான் ரியா 25/62 சாலையில் நடைபெறும்.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் பெயரில் மாநில அரசினால் நடத்தப்பட்டு வந்த இந்த மலிவு விற்பனை தற்போது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் டிசம்பர் மாதம் வரை நடத்தப்படுகிறது.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :