ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

அரசு நிர்வாகம் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையே மாநிலத்தின் உயர்வுக்கு காரணம்.

ஷா ஆலம், ஜூலை 30- மூன்று பிரதான துறைகளில் குறிப்பாக தொழில்துறையில் மிகப்பெரிய முதலீட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து சிலாங்கூர் பெற்று வருகிறது.

மாநில அரசின் தலைமைத்துவம், நிர்வாகம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த உயர்ந்த முதலீடு நிரூபிக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில மந்திரி புசாராக பதவியேற்ற போது மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டின் மதிப்பு 2,470 கோடி வெள்ளியாக இருந்தது. ஓராண்டிற்குப் பிறகு அந்த எண்ணிக்கை 4,78 கோடி வெள்ளியாக அதிகரித்தது.

கோவிட்-19 பெருந்தொற்று உலகையும் நாட்டையும் உலுக்கிய போது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் முறையே 3,870 கோடி வெள்ளி மற்றும் 2,880 கோடி வெள்ளி முதலீட்டை மட்டுமே மாநிலம் பெற்றது.

அரசியல் நெருக்கடி காரணமாக பல மாநிலங்களும் மத்திய அரசும் மாற்றம் கண்டபோதும் சிலாங்கூர் மாநிலத்தின் முதலீடு தொடர்ந்து வலுப்பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டில் 4,780 கோடி வெள்ளியாக இருந்த முதலீடு கடந்தாண்டில் 6,010 கோடி வெள்ளியாக அதிகரிப்பைக் கண்டது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை தொடர்ந்து உயர்த்துவதற்காக மாநில அரசு ஐந்தாண்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. முதலாவது சிலாங்கூர் திட்டம் என அழைக்கப்படும் அந்த முன்னெடுப்பு வரும் 2025ஆம் ஆண்டிற்குள் அடைவு நிலைக்கான அளவீடாக 14 குறியீடுகளையும் அது வரையறுத்துள்ளது


Pengarang :