ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

விபத்துக்குள்ளாவதற்கு  முன்னர் விமானம் சற்று தடம் மாறியது- அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

ஷா ஆலம், ஆக 18- இங்குள்ள பண்டார் எல்மினாவில் நேற்று மாலை விபத்துக்குள்ளான விமானம் நிர்ணயிக்கப்பட்ட பயண இலக்கை விட சற்று தடம் மாறியதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்  உறுதிப்படுத்தினார்.

சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலைய கட்டுபாட்டு கோபுரம் நேற்று பிற்பகல் 2.48 மணிக்கு தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கிய மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் தனது அசல் தடத்தை விட்டு விலகியதாக அவர் சொன்னார்.

தரையிறங்குவதற்கு முன்னர் அந்த விமானம் தனது தடத்தை விட்டு சற்று விலகியதை கட்டுப்பாட்டுக் கோரபும் உணர்ந்தது. சிறிது நேரத்தில் விபத்து நிகழ்ந்த இடத்தில் கரும்புகை எழுந்ததை கட்டுப்பாட்டு கோபுர அதிகாரிகள் கண்டனர் என்று நேற்று சுபாங் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் எட்டு பயணிகள் இருந்ததையும் அவர் அவர் உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் உயிரிழந்த இரு பொது மக்கள் தொடர்பான விபரங்களை தடயவியல் சோதனைக்குப் பின்னர் போலீசார் வெளியிடுவர் என்றும் அவர் கூறினார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினரும் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருணும் ஒருவர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


Pengarang :