ECONOMYMEDIA STATEMENTWANITA & KEBAJIKAN

கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 45 – ஆம் ஆண்டின் திருமுறை ஓதும் விழா

செய்தி ; மா. சிவகுமார்

கோல சிலாங்கூர்  ஆகஸ்ட்  18,  கோல சிலாங்கூர் வட்டாரப்  பேரவை ஏற்பாட்டில் 45-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த 13-08-2023 – ஆம் திகதி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் மாணவர்கள்  காலை பூஜையுடன்  தொடங்கி   புக்கிட்  பிலிங்பிங்  தேசிய வகை ரிவர் சைட் தமிழ் பள்ளியில்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களுக்கான திருமுறை, பஞ்சப் புராணம், பேச்சு  போட்டிகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற திருமுறை விழாவின்  முதல் அங்கமாக பிரிவு 1,2,3,4,5,வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு திருமுறை போட்டிகள்  நடைபெற்றது. 5 -நடுவர்களை  கொண்ட குழுவினர் காலை 8:00 -மணி தொடங்கிய போட்டியை  நண்பகல் 12:00 -மணி வரையில் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நண்பகல் 1:00 -அளவில்  கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் தலைவர், தொண்டர்மணி  திரு .பன்னீர்வேலு   பேசுகையில் முதலில் அனைத்து  பெற்றோர்களுக்கும்  தங்கள் பிள்ளைகளை தகுந்த நேரத்தில் அழைத்து வந்துள்ளதுடன்,  பிள்ளைகளைச் சமய  நிகழ்வுகளில் ஈடுப் படுத்தியதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.
அதே வேலையில் இனி வரும் காலங்களில்  நிகழ்வுக்கு வரும்  பெற்றோர்களும் , கலாச்சார, சமய உடைகளை அணிந்து வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறினார்.  ஒவ்வொரு ஆண்டும்  பெற்றோர்கள் தங்கள் கடமைகளை சரியாக ஆற்ற பாடுப்பட கேட்டுக்கொண்ட அவர், அப்படிப்பட்ட செயல்களின் வழி   நம் பிள்ளைகளுக்கு நாம் நல்ல முன்னுதாரணம்  ஆகிறோம் என்றார்.
 நம்  பிள்ளைகளை சிறந்தவர்கள் ஆக்க நாம்  அளிக்கும்  ஊக்குவிப்பு  மற்றும்  வழிகாட்டல் படியே  எதிர்காலத்தில் அவர்கள் நடப்பார்கள். இது போன்ற  நிகழ்வுகள்  சமூதாய இயக்கங்களின்  சிறு பங்களிப்பு   அதில்   கலந்துக்கொண்டு  பிள்ளைகளை  உற்சாக படுத்தும்  அதே வேளையில் , அவர்களை சிறந்த  பிரஜைகளாக நாம் உருவாக்க  பங்களிக்கிறோம் என்றார்.
இன்று  இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அனைவரையும் நன்றாகத் திருமுறைப் பாடல்களைப் பாடி பரிசுகள் வாங்க வேண்டும் என்று ஆயத்த நிலையில் இருப்பீர்கள். எனவே இந்தத் தருணத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள்  என வாழ்த்து கூறி விடை பெற்றார் கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவை யின் தலைவர் திரு பன்னீர் வேலு.

அதனை அடுத்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி நடேசன் அவர்களின் உரையில் முதலில் இன்று நடைபெறும் போட்டிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இன்றைய நிகழ்வுகள்  நிறைய மாணவர்கள் பாரம்பரிய உடையில் வந்துள்ளதை பாராட்டிய அவர் அதற்கு  பெருமைப் படுவதாக கூறினார்.  அதுப் போல, பெற்றோர்கள் நமது சமயத்தை வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்கள் பிள்ளைகளை ஆலயங்களுக்குச்  செல்வதைக் கட்டாயப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் திருவிழாக் காலங்களில் நமது பிள்ளைகள்  சமய நெறியுடன்  நடந்து கொள்ள அவர்களை சிறு வயது முதல் பயிற்றுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு நமது பாரம்பரியத்தின் உன்னதம் தெரியும், அவர்களும் அதை  போற்றி வளர்பார்கள், சுயமாக சமய நடவடிக்கைகளில்  ஈடுபடுவார்கள்.  நமது  பாரம்பரிய உடையை அணிந்து வருவதும்  அதில் ஒரு  அங்கமே எனக்கூறி, நன்றே செய்வோம்  அதை இன்றே செய்வோம்  என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு :ராமசாமி நடேசன்.

கோலசிலாங்கூர்  வாகீசர், காந்திஜீ, சுங்கை திராப், ராஜா முசா, ரிவர் சைட், கோல சிலாங்கூர் தோட்டம், புக்கிட் ரோத்தான், கம்போங் பாரு, என – 8-தமிழ்ப்பள்ளிகளின்  சுமார் 250 – மாணவர்கள்  இத்திருமுறை விழாவில் கலந்து கொண்டனர்.

 இத்திருமுறை விழாவில்  நிறைவாக  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பிரிவுகளில்  பரிசுகள்  வழங்கப்பட்டன.. அதோடு வெற்றி பெற்ற மாணவர்கள்  வரும்  27/08/2023 – ஆம் திகதி கிள்ளானில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று  கூறி வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கோலசிலாங்கூர் வட்டார பேரவையின் செயலாளர் விவேக நாயகன் திரு :பூபாலன் ரெங்கசாமி  விடைபெற்றார்

Pengarang :