ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கி, குரங்கு அம்மை நோய்த் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம

கோலாலம்பூர், நவ 29- அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை போன்ற நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.

டிங்கி சம்பவங்களின் அதிகரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராவ் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் சஹிடான் காசிம் சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் குரங்கை அம்மை நோய் கோவிட்-19 பெருந்தொற்றைப் போல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜெராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் சப்ரி அஸிட் வினவுவார்.

போலீஸ்காரர்களின் சேவை மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஓய்வு பெற்ற காவல் துறையினருக்காக மேற்கொள்ளப்படும் சமூக நலத் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் ஜெலி தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் கேட்கவுள்ளார்.

பூமிபுத்ரா தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை விளக்கும்படி தொழில்முனைவோர்  மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சரிடம் கினாபாத்தாங்கன் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் கேட்டுக் கொள்வார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடர் வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது.


Pengarang :