ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

 11,784 ரப்பர் சிறு தொழில் முனைவோருக்கு  பருவமழை நிவாரணத்திற்காக (பிஎம்டி) 9.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், டிச 20: நாடு முழுவதும் தகுதியுள்ள மத்திய நில மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த (ஃபெல்டா) 11,784 ரப்பர் சிறு தொழில் முனைவோருக்கு பருவமழை நிவாரணத்திற்காக (பிஎம்டி) 9.4 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ரப்பர்  சிறு தொழில் மேம்பாட்டு ஆணையம் (ரிஸ்தா) மூலம் ஒவ்வொரு ரப்பர்  சிறு தொழில் முனைவோருக்கு வருக்கும்  ரிம 800 உதவித்தொகை டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என்று ஃபெல்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“முதல் கட்ட கட்டணம் RM400 மதிப்பை உள்ளடக்கியது, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்கள் ஒவ்வொன்றும் RM200 மதிப்பை உள்ளடக்கியது. இந்த பணம் அனைத்தும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களின்  வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

“ஃபெல்டாவின் ரப்பர்  சேகரிப்பு மையத்திற்கு ரப்பர்களை அனுப்பும்  தொழிலாளிகள், ரப்பர் மரத்தில் நோய் தாக்குதல்கள் காரணமாக விளைச்சல் இல்லாதவர்கள் மற்றும் மீண்டும் நடவு செய்துள்ளவர்கள் ஆகியோர் இந்த உதவியைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ஃபெல்டாவின் கூற்றுப்படி, இந்த உதவியானது ரப்பர் ஆலை  சிறு தொழில் முனைவோருக்கு  குறிப்பாக மழைக்காலத்தில்  சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

இந்த ஒதுக்கீட்டை வழங்கியதில் அரசாங்கத்தின் அக்கறைக்கு ஃபெல்டா அதே அறிக்கையில் நன்றி தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :