ECONOMYMEDIA STATEMENTPBT

ஜமேக் பள்ளி வாசலில் பிரதமர் சிறப்பு தொழுகை.

செய்தி சு.சுப்பையா

கோத்தாடாமன்சாரா.டிச.22-  கோத்தா டாமன்சாரா ஜமேக் பள்ளிவாசலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வெள்ளிக் கிழமை தொழுகையை  மேற்கொண்டார்.   அத்தொழுகையில்  அவருடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, கோத்தா டமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் துவான் இசூவான் காசிம் மாற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருகை தந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அருகிலுள்ள வாரிசான் அங்காடி கடைக்கு  திடிர் வருகை மேற்கொண்டு நாசி ஆயாம் ( பொரித்த கோழியும் சோறும் ) சாப்பிட்டார். அவருடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, துவான் இசூவான் காசிம், சுங்கை பூலோ பி.கெ.ஆர் தலைவர் சிவராசா, கோல சிலாங்கூர் பி.கெ.ஆர் தலைவர் தீபன் சுப்ரமணியம், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரிகள் கைரி, தமிழ் செல்வம், சீலன் மற்றும் பலர் உடன் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் வாரிசான் அங்காடி கடைக்கு மதிய உணவு சாப்பிட வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் கோத்தா டமன்சாரா வட்டாரம் முழுவதும் பரவியது.

இதனால் இந்த அங்காடி கடையில் 500 க்கும் அதிகமான பல்லின மக்கள் கூடினர். இந்த அங்காடி கடைக்கு வருகை தந்த பிரதமரை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ அமிருடின் சாரி வரவேற்றார். கூடி இருந்த பொது மக்களும் உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மதிய உணவிற்கு பிறகு அருகே உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகை மேற்கொண்டார்

மேற்கண்ட இரண்டு நிகழ்விலும் போலீஸ் உயர் அதிகாரிகள், பிரதமர் துறை உயர் அதிகாரிகள், பெட்டாலிங் நில அலுவலக அதிகாரிகள் என்று பலர் கலந்துக் கொண்டனர்.

கடந்த  ஆண்டு  நடை பெற்ற பொதுத் தேர்தலின் போது சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வெற்றிக்காக வருகை தந்தார். பிரதமர் பதவி ஏற்ற பிறகு இது தான் முதல் முறையாக கோத்தா டமன்சாராவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த திடீர் வருகை அவ்வட்டார மக்களை உற்சாகப்படுத்தியது.


Pengarang :