ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் முதல் திட்டத்தின் படி  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை காக்க பசுமை மேம்பாடு  அவசியம்

சுபாங் ஜெயா, ஜனவரி 13 – மாநில அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதன் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது, குறிப்பாக சிலாங்கூர் முதல் திட்டத்துடன் (RS-1) இணைந்த மரம் நடும் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பசுமை மேம்பாடுக்கு முக்கிய பங்களிக்கிறது.

பல்வேறு தரப்பினராலும் ஏற்பாடு செய்யப்படும் மரம் நடும் நிகழ்ச்சிகள் சுற்றுச்சூழல் பசுமையை ஊக்குவிக்கும், குறிப்பாக நகர்ப்புறங்களில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் என்று முதலீட்டிற்கான மாநில ஆட்சிக்குழு குழு உறுப்பினர் இங் ஸீ ஹான்   கூறினார்.

“இன்று, சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) ஏற்பாடு செய்துள்ள, மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளானர்ஸ் (எம்ஐபி) உடன் இணைந்து ஏழு வீட்டமைப்பு மேம் பாட்டாளர்களை உள்ளடக்கிய மரம் நடும் திட்டத்தை வரவேற்று  பேசினார் .

“இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் தொடரப்பட வேண்டும், கின்றாராவுக்கு மட்டும் அல்ல,” என்று அதன் மாநில சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கூறினார்.

இன்று பிகே 3/1 பண்டார் கின்ராராவில் நடந்த  ஒரு மரத்தை  நடுவோம் (பாபட்)  நிகழ்ச்சியில் பேசினார்.
அங்கே (golden chains)தங்க சங்கிலிகள், (kiara payung) கியாரா பாயுங்,  (white cempaka) வெள்ளை செம்பகம்,  (bongor), போங்கோர்,  (black rosewood) கருப்பு ரோஸ்வூட் உட்பட பல்வேறு வகையான 35 மரங்கள் சுற்று வட்டாரத்தில் நடப்பட்டன.
இதற்கிடையில், MBSJ இன் நகர்ப்புற திட்டமிடல் துணை இயக்குனர் அஸ்மான் முகமட் மஹாயுடின் கூறுகையில், இந்த ஆண்டு 350,000 மரங்களை நடவு செய்ய கவுன்சில் இலக்கு வைத்துள்ளது, அதிக உறிஞ்சுதல் மற்றும் நீடித்த தன்மை கொண்ட இனங்கள் மீது கவனம் செலுத்துகிறது.

“2022 ஆம் ஆண்டில், நாங்கள் தோராயமாக 227,863 மரங்களை நட்டோம், இது கடந்த ஆண்டு 320,000 ஆக அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு, மேலும் 350,000 மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
“இப்பொழுது  குறைவான மரங்கள் உள்ள பகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதற்குப் பிறகு, பூச்சோங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கான், புத்ரா பெர்மாய் ஆகிய இடங்களில் மரம் நடுவது தொடரும்,” என்றார்.

மலேசிய  இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளானர்ஸ் MIP தலைவர் டத்தின் நுரைடா சலாவுடின்  கூறுகையில், கார்ப்பரேட் சமூக பொறுப்பின் கீழ் 2008 ஆம் ஆண்டு முதல் மரம் நடும் திட்டம் வருடாந்திர நிகழ்வாக மேற்கொள்வதாகவும்.   கடந்த ஆண்டு முதல் MBSJ உடன் இணைந்து திட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாகவும் , மேலும் அனைத்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில அரசாங்கத்துடன் ஒத்துழைக்க எப்போதும் உறுதி பூண்டுள்ளோம்.

“ஒவ்வொரு மரத்தையும் பராமரிக்க உள்ளூர் அதிகாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் போக்கு மாறி, குடியிருப்பாளர்களும்  நட்ட  மரங்களை பராமரிக்க   ஒத்துழைப்பார்கள் என்று எம்ஐபி நம்புவதாக அவர் கூறினார்.


Pengarang :