ECONOMYhealthMEDIA STATEMENT

இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்திறகு  வெ.70,000 ஒதுக்கீடு- கோத்தா அங்கிரிக் உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஜன. 28 –  இவ்வாண்டு கோத்தா அங்கிரிக் தொகுதியில்  மூன்று இலவச  மருத்துவப் பரிசோதனை இயக்கங்களை நடத்த  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 70,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதல் மருத்துவப் பரிசோதனை இயக்கம் நேற்று இங்குள்ள  செக்சன் 11, டேவான் ஜென்ஜாரமில் நேற்று   நடைபெற்றதாகக் கூறிய தொகுதி உறுப்பினர் நஜ்வான் ஹலிமி,  அடிப்படை மருத்துவப் பரிசோதனையைப் பெற விரும்பும் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உட்பட சுமார் 15,000 பேர்  இத்திட்டங்கள் மூலம் பயனடைவார்கள் என்று சொன்னார்.

முப்பது வயதுக்கும்  மேற்பட்ட  பெண்களுக்கு மேமோகிராம்  மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இலவச கண் பரிசோதனைகளும் மலிவு விலையில் மூக்கு கண்ணாடிகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று நஜ்வான் கூறினார்.

புக்கிட் சுபாங் மற்றும் டெனாய் ஆலமில் இந்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளேன்.  மேலும்  குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் இங்கு அதிகமாக வசிக்கின்றனர் என்று   அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த மருத்துவ முகாமில்  கலந்துகொள்பவர்களுக்கு மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு மத்திய அரசின் மத்திய தரவுத்தள மையம் (பாடு) தொடர்பான  குறித்த விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :