ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நீலாய் போலீஸ் தலைமையகம், மந்தின் போலீஸ் லாக்கப்பிற்கு ஐ.ஜி.பி. திடீர் வருகை

கோலாலம்பூர், பிப் 12-    காவல்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் களப் பணிகளை ஆய்வு செய்வதற்காக நீலாய் மாவட்ட போலீஸ்  தலைமையகம்  மற்றும் நெகிரி செம்பிலான் மந்தின்  காவல் நிலைய லாக் அப் ஆகிய இடங்களுக்கு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இன்று திடீர் வருகை புரிந்தார்.

அரச மலேசிய  காவல்துறையினர்  முன்களப் பணியாளர்களின்  தினசரி நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் சோதனையிடுவதற்காக  கடந்த சனிக்கிழமை காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (டி.சி.சி) மேற்கொண்ட பயணத்தின்  தொடர்ச்சியாக அவரின் இந்த வருகை அமைந்துள்ளது.

இந்த திடீர் வருகையானது   தவறுகளைக் கண்டறிவதும் உடனடியாக தண்டனையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது அல்ல என்று ரசாருடின் தனது டிக் டாக் பதிவில் கூறினார்.

மாறாக,  காவல்துறையினர்  பணிகளிலிருந்து  இருந்து விலகிச் செல்லாதபடி அவர்களை கடிந்துரைப்பது, பணிகளின் நடைமுறையை சரிசெய்வதையும் இப்பயணம் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று கூறினார்.

வழக்கமானதைத் திருத்திக் கொள்வோம். சரியானதைப் பழக்கப்படுத்திக் கொள்வோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Pengarang :