ECONOMYMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

வளர்ப்புச் சகோதரியை  கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், ஏப் 12- கடந்த திங்கட்கிழமை தனது வளர்ப்பு சகோதரியை கத்தியால் காயப்படுத்தியதாக லோரி உதவியாளர் மீது இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட்  டி. அஷ்வினி முன்,  தனக்கெதிராக  வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை எல் தியாகராஜ் (வயது 52) என்ற அந்த ஆடவர் மறுத்து   விசாரணை கோரினார்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் இங்குள்ள தாமான் முஹிபாவில் உள்ள ஒரு வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி எல்.தேவி (வயது 31) என்பவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 326ஏ பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரமபடி வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே வீட்டில் வசிப்பதால் பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன்  குற்றம் சாட்டப்பட்டவரை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் ஐஸ்யா மாட் இசா நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் விவாகரத்து பெற்றவர் என்பதோடு  ஒரு பிள்ளையையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால்  அவருக்கு  குறைந்தபட்ச ஜாமீன் வழங்க வேண்டும் தியாகராஜின் சார்பில் ஆஜரான சட்ட உதவ மையத்தின் வழக்கறிஞர் ஃபவுஸ்டினா பிரான்சிஸ்   என்று நீதிமன்றத்திடம் முறையிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 3,000 வெள்ளி ஜாமீனில்  விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கு விசாரணை வரும் மே 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Pengarang :