ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமரே தவறு செய்தாலும் இந்திய சமுதாய நலன் காக்க துணிந்து நின்று குரல் கொடுப்பேன்  பாப்பா ராய்டு சூளுரை

செய்தி. சு. சுப்பையா

கோல குபு பாரு. ஏப்.22 – இந்தியர் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். பிரதமரே ஆனாலும் இந்தியர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு சூளுரைத்தார்.

இன்று காலை முதல் கோல குபு பாரு வட்டாரத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு காணும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலை 5.00 மணியளவில் கோல குபு பாரு வட்டாரத்தில் உள்ள இந்து ஆலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல குபு பாரு ஜ.செ.க. கிளையின் செயலாளரும் உலு சிலாங்கூர் நகராண்மை கழக முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ விக்னேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 10 க்கும் மேற்பட்ட ஆலயங்களின் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

ஆலய பொறுப்பாளர்கள் தங்களது ஆலயம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாப்பா ராய்டு விடம் விளக்கம் கொடுத்தனர். சுமார் 10 ஆலயங்கள் நில விவகாரம், மானியம் மற்றும் பதிவு வேலைகள் குறித்து பாப்பா ராய்டுவின் உதவியை நாடினர்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் கோல குபு பாரு சட்டமன்றம் மாநில அரசின் ஆளும் கட்சியில் கீழ் கடந்த பல தவணையாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் இதன் சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியொங் காலமானார். இதனால்  அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மீண்டும் இத்தொகுதியை நாம் கைப்பற்ற வேண்டும். இத்தொகுதியை தற்காத்துக் கொள்ள இந்திய வாக்குகள் அத்தியாவசியமானது.

கோவிலும் தமிழ்ப் பள்ளிகளும் நமது இரண்டு கண்களை போன்றது. இது நமது இனத்தின் அடையாளங்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள நமது உரிமைகள் ஆகும் இதனை நாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

யார் தவறு செய்தாலும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். பிரதமர் ஆனாலும் இந்திய சமுதாய உரிமைக்காக நாம் தொடர்ந்து துணிந்து நின்று குரல் கொடுப்பேன் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.

நம் நாட்டில் இந்திய மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையுமானால் அடுத்த 10 ஆண்டுகளில் நமது அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்காக ஆண்டுதோறும் ரி.ம. 16 மில்லியனுக்கு மேல் செலவிடுகிறது. இதை நாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.  இந்த இடைத்தேர்தலில் இந்திய வாக்குகள் மீண்டும் ஒற்றுமை அரசுக்கே வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தொகுதி தேர்தலில் மடாணி  அரசுக்கு ” அஜார் பண்ண வேண்டும் ” என்று எதிர்க்கட்சிகள் விசம பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இவ் வட்டாரத்தில் உள்ள இந்தியர்களின் நலன் காக்க ஒற்றுமை அரசின் வேட்பாளரை ஆதரிக்கும் படி பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.

இந்த இந்து ஆலய கலந்துரையாடல் நிகழ்வில் கோல குபு பாரு மலேசிய இந்து சங்கத் தலைவர் கலைச்செல்வன், மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் மனோகரன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வள்ளி கண்ணு, தொழிலதிபர் டத்தோ சாமி மற்றும் சுற்று வட்டார ஆலயத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Pengarang :