SELANGOR

16,000 குடும்பங்கள் மலிவு விற்பனையின் மூலம் பயனடைந்துள்ளனர் -ரவாங் தொகுதி

கோம்பாக், ஜூலை 10: ரவாங் தொகுதியில் கடந்த ஜனவரி முதல் இதுவரை நடைபெற்ற மலிவு விற்பனையின் மூலம் (38 முறை) மொத்தம் 16,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இனி ஒரு மாதத்திற்கு குறைந்தது ஆறு முறை மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய ரவாங் தொகுதியின் உறுப்பினர் திட்டமிட்டுள்ளார்.

“சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) மக்கள் அதிகம் வாங்கும் கோழி மற்றும் முட்டைகளின் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

“பிகேபிஎஸ் ரவாங்கில் ஒரு எஹ்சான் கடையைத் திறக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைத்தேன். இதனால் இங்குள்ள குறைந்த திறன் கொண்டவர்கள் ஒவ்வொரு முறை பொருட்களை வாங்கும் போதும் பணத்தைச் சேமிக்க முடியும்” என்று சுவா வெய் கியாட் கூறினார்.

முன்னதாக அவர் தாமான் பிலாங்கியில் உள்ள செலாயாங் நாடாளுமன்ற அளவில் நடைபெற்ற மலிவு விற்பனையைப் பார்வையிட்டார். அதில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், காலை 9 மணி முதல் மக்கள் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கத் தொடங்கினர் என பிகேபிஎஸ் தோட்ட மூத்த உதவி மேலாளர் சைஃபுல் அஸ்ரப் லோக்மன் கூறினார்.

“வழக்கம் போல், கோழி, முட்டை மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும், அவை அனைத்தும் இரண்டு மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தன,” என்று அவர் கூறினார்.

பி.கே.பி.எஸ் எதிர்வரும் ஜூலை 15 முதல், பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு கிலோகிராம் எண்ணெய் பாக்கெட்டை RM2 என்ற விலையில் விற்பனை செய்கிறது.


பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து 

கொள்ளலாம்.

Pengarang :