SELANGOR

RM15 வரி தள்ளுபடி மார்ச் 31 வரை நீட்டிப்பு

ஷா ஆலம், பிப் 28: சுபாங் மாநகராட்சியில் (MBSJ) வசிப்பவர்கள் RM15 வரி தள்ளுபடி அனுபவிக்க இன்னும் வாய்ப்பு உள்ளது காரணம் இச்சலுகை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

`EzyMBSJ`, `Ezypay` கைப்பேசி செயலி, `E-Masspro` மற்றும் கியோஸ்க் மெஷின்கள் மூலம் வரி பாக்கி இல்லாமல் பணம் செலுத்தும் முதல் 75,000 நபர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது

“எம்பிஎஸ்ஜே, உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதையும், நன்கு பராமரிக்கப் படுவதையும் உறுதிசெய்ய, வரி செலுத்தும் பொறுப்பை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

“QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் EzyMBSJ` உறுப்பினராகப் பதிவு செய்து வரி பாக்கியைச் சரிபார்த்து கொள்ளலாம்.மேலும், டிஜிட்டல் மற்றும் வழக்கமான முறைகளைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரியைச் செலுத்தலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு பொதுமக்கள் www.mbsj.gov.my மற்றும் எம்பிஎஸ்ஜேவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களைப் (முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர்) பார்வையிடலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால், சுபாங் மாநகராட்சி அழைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (கட்டளை மையம்) 03-8024 7700 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :