SELANGOR

மந்திரி பெசார்: நோ ஒமாரின் நடவடிக்கைகள் சிலாங்கூர் மாநில மக்களை தண்டிப்பதாகவே உள்ளது

நகர் நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நோ ஒமாரை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி அடைந்த மாநிலங்களில்  உள்ளாட்சித் மேம்பாட்டு  திட்டங்களில் பாரபட்சமின்றி நடந்துக் கொள்ளுமாறு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன நோ சிலாங்கூர் மாநிலம் நாட்டின் உள்நாட்டு  உற்பத்தியில் முதல் நிலையில் இருப்பதை உணர வேண்டும்.

” நோ ஒமார் தனது சட்டைப் பையில்  இருக்கும்  ஒவ்வொரு ரிங்கிட்டிலும் 25 சென் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து வருகிறது என்ற கூற்றை புரிந்து கொள்ளாமல் இருப்பது சரியல்ல. ஆக, அவர் தொடர்ந்து பொறுப்புள்ள  அமைச்சராக நடந்து மத்திய அரசின் திட்டங்களை நியாயமான முறையில் சட்டத்தை மதித்து  பகிர்ந்தளிக்க நடக்க வேண்டும்.” என்றார்.

 

அதற்கு முன்பு, அவர் 85 மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தங்கும் விடுதியில்  அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

கடந்த 20 ஏப்ரலில், நோ நிதிப் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி பகுதியில் மட்டும் தீவிரம் காட்டும் என்று தெரிவித்தார்.

நோ ஒமாரின் நடவடிக்கைகள், சிலாங்கூர் மக்களை தண்டிப்பதாகவே உள்ளது என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

 

” சிலாங்கூர் மாநில மக்கள்  இப்படி பட்ட தலைவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இதற்கு முன்பு கடந்த 17 மார்ச்சில் நோவின் கீழ் உள்ள அமைச்சு தேசிய முன்னணி தோல்வி அடைந்த நாடாளுமன்ற தொகுதிக்களுக்கான சிறிய அளவிலான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்களை ரத்துசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Pengarang :