SELANGOR

மந்திரி பெசார் தொடர்ந்து ஜோர்டான் நாட்டிற்கு பணி நிமித்தமாக பயணம்

ஷா ஆலம், மே 2:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் மாநில பிரதிநிதிகள் அரபு நாடுகளுக்கான பயணத்தில் ஜோர்டான் நாட்டிற்கு நாளை செல்ல  இருக்கிறார்கள். இவ்வருகையின் பொது மாநில அரசாங்கத்தின் கல்வி நிதியை வழங்கும் வேளையில் அவர்களோடு கலந்துரையாடல் மேற்கொள்ள இருக்கின்றனர்.

 

முகமட் அஸ்மின் அலி ஜோர்டான் நாட்டிற்கான மலேசிய தூதர் மேதகு ஸக்ரி ஜாபாரை மாலையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரோடு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நிக் நஸ்மி நிக் அமாட், டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி, டாக்டர் டரோயா அல்வி மற்றும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகாவின் இயக்குனர் டத்தோ ஹாரிஸ் காசிம் ஆகியோர்  உடன் சென்றனர்.

இதற்கு முன்பு, மாநில அரசாங்கம் பெடுலி சிஸ்வா திட்டத்தின் கீழ் ரிம 3000 அரபு நாடுகளில் பயிலும் சிலாங்கூர் மாநில பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. மாணவர்களின் பொருளாதார சுமைகளை குறைக்கும் நோக்கத்தில்  உதவி நிதி ரிம 2500-இருந்து ரிம 3000-ஆக உயர்த்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


Pengarang :