ECONOMY

ஐந்து மாதங்களில் பிரெண்ட் எண்ணெய் விலை ஆக குறைவு Harga minyak

நியூ யோர்க், மே 3:

பிரெண்ட் நிறுவனத்தின்  எண்ணெய் விலை இறக்கம் ஐந்து மாதங்களில் படு வீழ்ச்சிக்கு சென்றதை அடுத்து கடந்த நவம்பர் மாதத்தில்  ஓபேக் நாடுகள் உற்பத்தியை குறைக்க ஒப்பந்தம் செய்ததில் இருந்து பார்க்கும் பொழுது மிக மோசமான நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் தெரிவிக்கையில் கச்சா எண்ணெய் விலை தொழில் நுட்ப நிலையை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய சந்தையில் இறங்குமுகமாக இருப்பதாகவும், இது அமெரிக்கா, கனடா மற்றும் லிபியா உற்பத்தி  அதிகரிப்பின் காகாரணமாக தொழில் நுட்ப விற்பனை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஓபேக் நாடுகளின் செயல்பாடுகள் குறிப்பாக  ஒப்பந்தம் மீறி  உற்பத்தியை குறைக்காமல் இருந்தது நிலைமையை இன்னும் மோசம்  அடைந்தது.

பிரெண்ட் சந்தையில் இறங்குமுகமாக 2.1% குறைந்து ஒரு பீப்பாய் வீதம் அமெரிக்கா டாலர்  $50.46-ஆக இறக்கம் கண்டது. இது கடந்த 28 நவம்பர் மாதத்தில்  இருந்து ஆக குறைவான அளவே ஆகும்.


Pengarang :