MEDIA STATEMENT

சரவாக் நிரந்தர வைப்புத் தொகை மாநிலம் என்ற தோற்றம் மாறுகிறது

கடந்த மே 6, 2017-இல் கிரேண்ட் போல்ரூம் ஈஸ்வூட் வேலி கோல்ப் & கன்றி கிளப், மிரியில் நடந்த சரவாக் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.  ஒராங் உலு சமூகத்தை சேர்ந்தவர்கள் மிக  ஆரவாரத்துடன் வருகையாளர்களை வரவேற்பு அளித்தார்கள். இதற்கு முன் சரவாக் பயணத்தில் இபான் மற்றும் டயாக் சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு நல்ல முறையில் மரியாதையும் பாசத்துடன் நடந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்த பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின்  இரவு விருந்து நிகழ்ச்சியை பற்றிய கண்ணோட்டம் என்னவென்றால் பல பொது மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு தலைவர்களின் அரசியல் பிரசாரங்களும் அடங்கிய ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சரவாக் கெஅடிலான் தலைவர் பாரு பியான் பேசுகையில் வரும் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் இடையே தொகுதி பிரச்சனைகள் எழாமல் இருக்கும். கடந்த மாநில தேர்தலில் கிடைத்த பாடம் போதும் என்று கூறினார். அதேபோல் ஜசெக தலைவர் பேசுகையிலும் பாக்காத்தான் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படும்  அரசியல் கூட்டணியாக  அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அமானா கட்சியின் சரவாக் தலைவர் கூறுகையில், எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பையும் பார்க்கும் பொழுது சரவாக் மாநிலம் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை சரவாக்  இருந்து அனுப்பும்  என்று கூறினார்.

சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் மலேசியா நாட்டின் தோற்றத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் மேம்பாட்டு திட்டங்களில் உரிமை, வளங்களில் சமபங்கு உரிமை, கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் உரிமைகள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பறிக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. இதற்கு காரணம் தீபகற்ப மலேசியமக்கள்  அல்ல, மாறாக அம்னோ பிஎன் அரசாங்கமே ஆகும். இந்த நாள் வரை சரவாக்கை ஆளும் பிஎன் அரசாங்கம் இப்படி பட்ட மாயையை ஏற்படுத்தி வருகிறது.

சரவாக் மாநில மக்களின்  எழுச்சியை காணும் நேரம் வந்துவிட்டது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சரவாக் மக்களுக்காக போராடுவார்கள். சரவாக் மக்கள்  அம்னோ தேசிய முன்னணியிடம் இருந்து சுதந்திரம் பெற வேண்டும். நாட்டின் உண்மையான குடிமகனாக மாறி சரவாக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

* ஹாஷானுடின் முகமட் யூனுஸ்

அமானா கட்சியின் தேசிய உதவித் தலைவர்
9 Mei 2017


Pengarang :